முதல் முத்தம் எப்படி இருக்கணும் தெரியுமா??

Posted by: admin 07/03/2013 Comments Off on முதல் முத்தம் எப்படி இருக்கணும் தெரியுமா??

முதல் காதல், முதல் முத்தம் என்பது மறக்க முடியாதது. எங்கு எப்படி அது நிகழ்ந்தது என்பது மனதில் பசுமையாய் இருந்து கொண்டே இருக்கும். காதலிக்கும் போதோ, திருமண நாளின் முதல் இரவிலோ முத்தம் கொடுத்திருக்கலாம் பெற்றிருக்கலாம். காதலிக்கோ, மனைவிக்கோ முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளனர் நிபுணர்கள். படியுங்களேன்.
பசுமையான சோலை, அடர்ந்த வனப்பகுதி, தனிமையான சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் முத்தம் கொடுக்க அதுதான் ஏற்ற இடம். முதல் முதலாக கொடுக்கப்படும், பெறப்படும் முத்தம் சிறப்பு வாய்ந்தது. உங்களின் காதலியோ, மனைவியோ அதை நிச்சயம் எதிர்பார்ப்பார். முத்தம் கொடுக்க நண்பர்களுடன் குரூப்பாக செல்லும் இடங்களில் முத்தம் கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம். தனியாக இருவரும் செல்லும் இடமே ஏற்றது
முதல் முதலாக முத்தம் கொடுக்கும் போது பதற்றம் ஏற்படுவது இயல்புதான்.

மனதை ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். அவசரத்தில் உங்களின் துணையை காயப்படுத்திவிடவேண்டாம். அப்புறம் முதலே முடிவாகிவிட வாய்ப்புள்ளது. உங்கள் துணை முத்தம் கொடுக்க விரும்பினால் அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்களேன்.
முத்தம் கொடுப்பதற்கு முதலில் மூச்சுக்காற்று சுத்தமானதாக, புத்துணர்ச்சியுடையதாக இருக்க வேண்டும். எனவே துணையுடன் டேட்டிங் என்று முடிவு செய்த உடன் சுவாச புத்துணர்ச்சிக்கு வேண்டியவைகளை தயாராக செய்து விட்டு கிளம்புங்கள். புதினா சுவிங்கம் சாப்பிட்டால் மூச்சு புத்துணர்ச்சியோடு இருக்கும்.
தனியாக சந்திக்க இடம் கிடைத்து விட்டதே என்று உடனே தொடங்கிவிட வேண்டாம். கொஞ்சம் நேரம் பேசுங்கள். கண்களின் மூலம் சம்மதம் கிடைத்த உடன் அப்புறம் முத்தமிட தயாராகுங்கள். சரியான உடல் மொழி அவசியம். கொஞ்சம் நெருங்கினாலும் உங்கள் துணைக்கு நீங்கள் முத்தமிட விரும்புகிறீர்கள் என்பது உணர்த்தி விடும்.
முதல் முத்தம் என்பது மென்மையானதாய் மயிலிறகில் வருடுவதைப் போல இருக்கவேண்டும். அதற்காக போராட வேண்டாம். இயல்பாய் இருக்கட்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

Please Click Ads to Close